11 ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்... இன்று! ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
00:15

திருப்பூர்: 'இன்று, 11 ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது; இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதுவரை, 17 லட்சத்து, 11 ஆயிரத்து, 226 பேருக்கு முதல் தவணையும், ஏழு லட்சத்து, 79 ஆயிரத்து, 542 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்து, 84 ஆயிரத்து, 074 முதல் தவணையும், மூன்று லட்சத்து, 93 ஆயிரத்து, 395 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.பதினொன்றாவது கட்டமாக, திருப்பூர் மாவட்டத்தில், இன்று (25 ம் தேதி) தடுப்பூசி முகாம் நடக்கிறது.

ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும், பேரூராட்சிகளிலும், நகராட்சி மற்றும் மாநகராட்சியிலும் தடுப்பூசி கிடைப்பதற்காக முகாம் அமைத்து, விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, அவிநாசியில், 60, உடுமலை, 51, பல்லடம், வெள்ளகோவிலில், தலா, 39 இடங்கள். தாராபுரம், குண்டடத்தில் தலா, 36, பொங்கலுாரில், 34, குன்னத்துார், மடத்துக்குளத்தில் தலா, 33, மூலனுார், 32, குடிமங்கலம், திருப்பூரில் தலா, 29, காங்கயம், 24 உள்ளிட்ட மாவட்டத்தின், 645 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 41 நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாளை (இன்று) காலை, 7:00 முதல் இரவு, 7:00 வரை முகாம் நடைபெறும். தடுப்பூசி செலுத்தும் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த, 2,580 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை ஒரு தவணை தடுப்பூசியும் செலுத்தாதவர் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்,' என்று கூறியுள்ளார்.


எங்கு தடுப்பூசி போடலாம்?



திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஆயிரம் கோவேக் ஷின், 1,000 கோவிஷீல்டு என, 2,000 தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மாநகராட்சியின், 17 நகர் நல மையங்களுக்கு உட்பட்ட, 138 இடங்களிலும் முகாம் நடக்கிறது.கோவேக் ஷின், கோவிஷீல்டு இரண்டும் இம்மையங்களில் செலுத்தப்படுகிறது. ஜல்லிபட்டி, ஊத்துக்குளி, அவிநாசி, தாராபுரம், காங்கயம், பல்லடம், மடத்துக்குளம், உடுமலை, கரடிவாவி உள்ளிட்ட தாலுகா மருத்துவமனைகளில் இரு தடுப்பூசிகளும் செலுத்தப்படுகிறது. இவை தவிர்த்து, உடுமலை, தாராபுரம் நகராட்சி பகுதியில் தலா பத்து இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X