கொடைக்கானல்-கொடைக்கானல் பிரகாசபுரம் நுழைவு வாயில் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், தனியார் விடுதிகள், கல்லுாரி, துணை மின் நிலையம், குப்பை கிடங்கு உள்ளன.நகரின் எழில்மிகு காட்சியை காண இங்குள்ள'சிட்டி வியூ'பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன் குடிநீர் குழாய் அமைக்க ரோடு தோண்டப்பட்டது. தற்போது பெரும்பகுதி சீரமைத்த நிலையிலும்நுழைவு வாயில் உள்ள ஒரு கி.மீ., ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.இவ்வழியில்செல்லும் வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் ரோட்டில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சிநிர்வாகம்ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.