செந்துறை--சிறுகுடிலில் நத்தம் தாசில்தார் தலைமையில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது.நத்தம் அருகே சிறுகுடி யில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது. தாசில்தார் சுகந்தி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் கோகிலாவாணி, துணைத்தாசில்தார் மாயழகு, வருவாய் ஆய்வாளர் வளர்மதி முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., சிவக்குமார் வரவேற்றார். விவசாயிகள் பட்டா பெயர் மாற்றம், பாதுகாவலரின் பெயர்களில் திருத்தம் உட்பட சிறிய பிழைகள் திருத்தங்களுக்கு மனு கொடுத்து தீர்வு கண்டனர்.