வேடசந்தூர்-'இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்குவதைப்போன்ற ஊதியம் வழங்க வேண்டும்' எனஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர். -தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம்தலைவர் நளினி தலைமை யில் நடந்தது. செயலாளர் இந்துமதி வரவேற்றார். மாவட்டத் தலைவர் காளீஸ்வரன், செயலாளர் கோபிநாதன், பொருளாளர் சூசை மாணிக்கம்பேசினர்.கல்வி உரிமை சட்டப் படி ஆசிரியர்களுக்கு மருத்துவ முகாம் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.விருப்பம் தெரிவிக்காத ஆசிரியர்களை 'இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இடைநிலை ஆசிரியர் களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்க வேண்டும். ஊக்க ஊதிய உயர்வு பழைய முறைப்படி வழங்க வேண்டும். போராட்ட கால ஊதியமில்லா விடுப்பு நாட்களை முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.வருங்காலத்தில்மாணவர்களுக்கான விலையில்லா பொருட்களை அலுவலகம் மூலம்பள்ளியில் சேர்க்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டாரச் செயலாளர் ஜெயந்திராணி நன்றிகூறினார்.