எரியோடு-எரியோடு அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இன்ஸ்பெக்டர் சத்யபிரபா தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: மாணவர்கள் சீருடை அணிந்தே பள்ளிக்கு வரவேண்டும். தலை முடியை சீராக வெட்டி இருக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரக்கூடாது, பான்பராக், புகையிலை, மது அருந்தும் பழக்கங்களில் சிக்க வேண்டாம். மாணவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தீயவை என்ற பட்டியலில் இருப்பவற்றை அப்படியே புறம்தள்ளி வைக்க வேண்டும், என்றார். நாகையகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் விழிப்புணர்வு நடந்தது. ஏட்டுகள் கோபால், முத்துச்சாமி, ஆசிரியர்கள் கலையரசி, ரெங்கராஜ் பங்கேற்றனர்.