நிதி நெருக்கடி
அப்போது, 'கரன்ட் நின்ற அடுத்த நிமிஷமே, மொபைல் டவர் ஆப் ஆகி விடுகிறது. சிக்னல் மீண்டும் வர பல மணி நேரம் ஆகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த பிரச்னை தொடர்கிறது. இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை' எனக் கூறியுள்ளார். தஞ்சாவூர் மட்டுமின்றி, பல மாவட்டங்களிலும் இந்த புகார்கள் உள்ளன.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 330 டவர்கள் உள்ளன. அதில் பேட்டரி பேக்கப், ஜெனரேட்டர் அமைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது பல பேட்டரிகள் பழுதடைந்து, புதிய பேட்டரி மாற்ற வேண்டிய நிலையில் உள்ளன.ஜெனரேட்டரும் பழுதடைந்துள்ளது. 'மேனுவல்' முறையில் இயங்கக் கூடிய ஜெனரேட்டரை, ஆப்பரேட் செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், அவர்களும் வருவது இல்லை. ஜெனரேட்டருக்கு டீசல் வாங்க முடியாத அளவிற்கு நிதி நெருக்கடி உள்ளது.
பலன் இல்லை
தனியார் இடங்களில் டவர்களுக்கு 10 மாதங்களாக வாடகை வழங்காத நிலையில், உரிமையாளர்கள் நெருக்கடி வேறு உள்ளது. புதிய பேட்டரி மற்றும் ஆட்டோமேட்டிக் ஜெனரேட்டர் அமைக்க தேவையான நிதியை ஒதுக்குமாறு, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சருக்கு பல முறை கடிதம் அனுப்பியும் பலன் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.