சர்ச்சையில் சிக்கிய சிறுவர் காப்பகம் தேசிய ஆணைய பதிவாளர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
00:45

விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே, சர்ச்சையில் சிக்கிய சிறுவர் - சிறுமியர் காப்பகத்தை, தேசிய குழந்தைகள் நல ஆணைய பதிவாளர் அனு சவுத்ரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.


கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் கிராமத்தில், அமலா சிறுவர் - சிறுமியர் இல்லம் மற்றும் அமலா மெட்ரிக் பள்ளி உள்ளது. தங்கும் அறைஇதில் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற சிறுவர் - சிறுமியர் தங்கி படிக்கின்றனர்.இங்கிருந்த சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தாளாளர் ஜேசுதாஸ்ராஜா, 65, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


காப்பகத்தில் இருந்த 40 சிறுமியரை மீட்டு, கடலுார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றினர்.இந்நிலையில், டில்லியில் இருந்து தேசிய குழந்தைகள் நல ஆணைய பதிவாளர் அனு சவுத்ரி தலைமையில், உறுப்பினர்கள் ஹிமானி, அஞ்சலி மாலிகா அடங்கிய குழுவினர் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, போலீசார் கைப்பற்றிய ஆவணங்களை, ஆணைய பதிவாளரிடம் ஒப்படைத்தனர்.


அவற்றை ஆய்வு செய்த பின், சிறுவர் - சிறுமியர் தங்கும் அறைகளை பார்வையிட்டனர். விசாரணைமேலும், அமலா மெட்ரிக் பள்ளி மற்றும் காப்பகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.'ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், விரைவில் காப்பகத்திற்கு 'சீல்' வைக்கப்படும்' என போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X