மதுக்கரை: கேரளாவுக்கு, லாரி ஒன்றில் அரிசி கடத்தப்படுவதாக, நேற்றிரவு மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில், எஸ்.ஐ.,கவியரசு, எஸ்.எஸ்.ஐ., கதிரேசன், போலீஸ்காரர் குமரேசன் ஆகியோர், மதுக்கரை மரப்பாலம் அடுத்து பெட்ரோல் பங்க் அருகே, கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியே வந்த ஐஸர் 709 (பதிவெண் கே எல்.02. ஏ.பி..2350) லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 10 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு லாரி கொண்டு செல்லப்பட்டது. சுந்தராபுரம் பகுதியிலிருந்து, கஞ்சிக்கோட்டுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது.பாலக்காடு மாவட்டம், நல்லபிள்ளி, நீலிப்பதனை சேர்ந்த டிரைவர் ராமகிருஷ்ணன், 39 கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.