உதவி பெறும் பள்ளி சம்பள பட்டியல் குளறுபடி: பட்டதாரி ஆசிரியர் கழகம் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
01:09

சிவகங்கை:''அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், அலுவலர் சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்யும் சாப்ட்வேரை மாதந்தோறும் 15ம் தேதிக்குள் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுசெயலாளர் எஸ்.சேதுசெல்வம் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது:மாநில அளவில் உள்ள அரசு உயர், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், அலுவலர்களின் சம்பள மானிய பட்டியலில் கையெழுத்திடும் அதிகாரம் பள்ளி தலைமை ஆசிரியரிடம் உள்ளது. இதனால் அவர்கள் உடனே கையெழுத்திட்டு அந்தந்த தாலுகா கருவூலகங்களில் ஒப்படைத்து விடுவதால் உடனுக்குடன் சம்பளம் வந்து விடுகிறது. ஆனால் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், அலுவலர்கள் மாதந்தோறும் தங்களது சம்பளத்தை பெற கம்ப்யூட்டருடன் போராடி வரும் நிலை தான் உள்ளது.


இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர், அலுவலர் பட்டியலை முதலில் 'IFHRMS' (ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம்) சாப்ட்வேரில் பதிவேற்றி அந்த நகலில் பள்ளி தாளாளர், செயலரிடம் கையெழுத்து பெற்ற பின்னரே மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.அதற்கு பின்னர் அவர்கள் கருவூலகத்திற்கு பரிந்துரை செய்த பின்னரே உதவி பெறும் பள்ளி ஆசிரியர், அலுவலர்களுக்கு சம்பளம் ஏற்றப்படும். ஒவ்வொரு மாதமும் சம்பள மானிய பட்டியல் விபரங்களை 15 ம் தேதிக்குள் சாப்ட்வேரில் ஏற்றினால் மட்டுமே உரிய நேரத்திற்குள் சம்பளம் பெற முடியும்.


ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சாப்ட்வேர் மாதந்தோறும் 23 ம் தேதிக்கு பின்னரே செயல்பாட்டிற்கு வருகிறது. அதற்கு பின்னர் பட்டியலை பதிவேற்றம் செய்து தாளாளர், செயலர் கையெழுத்து பெற்று, மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைப்பதில் உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திணறி விடுகின்றனர்.


இதனை தவிர்க்க அரசு (IFHRMS) சாப்ட்வேரை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாதந்தோறும் 15 ம் தேதிக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உரிய நேரத்தில் சம்பளம் பெற முடியும். இதற்கு தமிழக கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X