தலைமைச் செயலரை எம்.எல்.ஏ.,க்கள் முற்றுகை ... நலப் பணிகள் முடங்கியதாக குற்றச்சாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
03:25


புதுச்சேரி, புதுச்சேரியில், மழை வெள்ள பாதிப்பை குறைத்து மதிப்பீடு செய்ததாக வெளியான தகவலால் ஆவேசமடைந்த எம்.எல்.ஏ.,க்கள், தலைமைச் செயலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.பு



துச்சேரியில் கடந்த 26ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் கன மழை பெய்து வருகிறது. உச்சபட்சமாக கடந்த 30ம் தேதி 12 செ.மீ., 18ம் தேதி 18.8 செ.மீ., மழை கொட்டியதால், 19ம் தேதி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால், எந்தப்பக்கம் பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் தத்தளித்தன. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.



ஆடு, மாடுகள் இறந்தன.பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் மூழ்கின. இதனால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ரூ. 300 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கும் என முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூறி வந்தனர்.இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் ரூ.20 கோடிக்கு குறைவாகவே மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணக்கெடுத்து உள்ளதாகவும், அந்த அறிக்கையையே மத்திய குழுவிடம் வழங்கி உள்ளதாக தகவல் பரவியது.இதையறிந்து ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.,க் கள் என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ், பாஸ்கரன், லட்சுமிகாந்தன், பா.ஜ., கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், காங்., சேர்ந்த வைத்தியநாதன், சுயேச்சைகள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர், நேற்று காலை 11:00 மணி அளவில், தலைமை செயலகத்திற்கு சென்றனர்.அங்கிருந்த தலைமைச் செயலர் அஸ்வனிகுமாரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



சுமார் 20 நிமிட விவாதத்திற்கு பிறகு வெளியே வந்த எம்.எல்.ஏ.,க்கள் கூறியதாவது;புதுச்சேரியில், புதிய ஆட்சி அமைந்து 6 மாதங்கள் ஆகிறது. முதல் மூன்று மாதங்கள் கொரோனா தீவிர தாக்குதலாலும், 2 மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாலும், தற்போது கனமழையாலும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தலைமை செயலர், துறை செயலர்கள் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோர் தங்கள் பணிகளை செய்யாததால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். உப்பனாறு வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உருளையன்பேட்டை தொகுதியில் மட்டும் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் தத்தளித்தன.நமது மாநிலத்தில் 20 ஐ.ஏ.எஸ்., 20க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். ஆளுக்கு ஒரு தொகுதிக்கு சென்று பார்வையிட்டிருந்தால் கூட மழை பாதிப்பு தெரிந்திருக்கும்.குறைந்தபட்சம் எம்.எல்.ஏ.,க்களை அழைத்து கேட்டிருந்தால் கூட பாதிப்பு விபரங்களை தெரிவித்து இருப்போம்.



பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இன்னும் தமிழ் மொழியை கற்காமல் உள்ளனர்.அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலை வாய்ப்பின்றி இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.நேற்று கல்வித்துறை அதிகாரியை சந்தித்தபோது, பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும். காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றோம்.அவர், காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கோப்பு அனுப்பினோம். பள்ளிகள் திறந்த பின் நிரப்பலாம் எனக் குறிப்பிட்டு திருப்பி அனுப்பிவிட்டதாக கூறினார்.



இதேபோன்று நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகள் தயாரித்து அனுப்பினாலும், தலைமைச் செயலர் திருப்பி அனுப்பி விடுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.மக்கள் நலப் பணிகள் தேக்கமடைந்துள்ளதையும், நலத்திட்டங்களை விரைவாக நிறைவேற்றவும் வலியுறுத்தினோம்.எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தலைமை செயலர் உறுதி அளித்துள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், தலைமை செயலகத்தையும், கவர்னர் மாளிகையையும் முற்றுகையிடுவோம். அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஒன்று திரண்டு, டில்லியில் பாராளுமன்றம் முன் உண்ணாவிரதம் இருப்போம்.



இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து பேச உள்ளோம். எந்த கட்சியும், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாதீர் எனக் கூறாது. அதன் காரணமாகவே கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஒருங்கிணைந்து கோரிக்கையை முன் வைக்கிறோம்.இவ்வாறு எம்.எல்.ஏ.,க்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X