மாதவரம் ரெட்டேரி உபரி நீரில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
03:54

புழல் ரெட்டேரியின் உபரி நீர், நெடுஞ்சாலையில் வெள்ளமாக பாய்வதால், வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் திணறி தடுமாறுகின்றனர்.



சென்னை கொரட்டூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் அம்பத்துார் சுற்றுவட்டாரங்களில் இருந்து, புறவழிச்சாலை மழை நீர் வடிகால் வாயிலாக கிடைக்கும் வெள்ள நீர் ஆகியவை, Vமொத்தமாக மாதவரம் ரெட்டேரிக்கு பாய்கிறது. ஆனால், 600 ஏக்கர்பரப்பளவும், கரை மட்டத்தில் இருந்து 8 அடி ஆழம் கொண்ட மாதவரம் ஏரியில், தற்போது0.5 டி.எம்.சி., நீர் மட்டுமே இருப்பு வைக்க முடியும்.இந்த ஏரி துார் வாரப்படாததால்,



ஏரியின் ஒரு புறத்தில் உள்ள, புழல் எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் லட்சுமிபுரம் என இரண்டு பக்கம் உள்ள கலங்கல் மூலமாக உபரி நீர் வெளியேறுகிறது. குறிப்பாக, எம்.ஜி.ஆர்., நகர், பாலாஜி நகர் மற்றும் வெஜிடேரியன் வில்லேஜ் வழியாக, வினாடிக்கு 200 கன அடிநீர் வெளியேறி, மாதவரம் நெடுஞ்சாலையில் பாய்கிறது.அந்த சாலை வழியாக, அரை கி.மீ., துாரம் பயணித்து வடபெரும்பாக்கம், புழல் ஏரி உபரி நீர் கால்வாயில் பாய்கிறது. இதனால், மாதவரம் நெடுஞ்சாலையில் 1.5 அடி உயரத்திற்கு தண்ணீர் கரை புரள்கிறது. இதில், கனரக வாகனம் முதல் அனைத்து வாகனங்களும், சிக்கி விரைவாக முன்னேறிச் செல்ல முடியாமல் திணறுகின்றன.



சில வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் அதிகமாக பழுதாகி நின்று விடுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள், வடபெரும்பாக்கம் உபரி நீர் கால்வாய் பாலம் வரை, வாகனங்களை தள்ளிச்செல்லும் நிலை தொடர்கிறது. மேற்கண்ட சாலையில், ஒரு பக்கம் மட்டும் மழை நீர் வடிகால் உள்ளது. அது இருந்தும் பயனற்ற நிலை தான் உள்ளது.இந்த பிரச்னைக்கு யார் தீர்வு காண்பது என மாநகராட்சி, நெடுஞ்சாலை மற்றும் நீர்வளத்துறைகள் போட்டி போடுகின்றன. இதனால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதிப்பது தொடர்கிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X