மூணாறு--மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட் ராஜமலையில் ஊராட்சி உறுப்பினர் தினகரனின் பசுவை புலி தாக்கி கொன்றது.நேற்று முன்தினம் மேய்ச்சலுக்குச் சென்ற பசு வீடு திரும்பவில்லை. வீட்டில் இருந்து 300 மீ., தொலைவில் புலி தாக்கி கொன்ற நிலையில் நேற்று பார்த்தனர். அங்கு பதிவான கால்தடங்களை வைத்து புலி என உறுதி ஆனது.அப்பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் இரவில் புலி ஓடியதை சிலர் பார்த்துள்ளனர். தற்போது அதனிடம் சிக்கி பசு இறந்ததால் தொழிலாளர்கள் அச்சம்அடைந்துள்ளனர்.-------------