பேசின்பாலம் : எலக்ட்ரிகல் கடையில் வேலை செய்து வந்த வாலிபர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை புளியந்தோப்பு, காந்தி நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர் பவுல்ராஜ், 21. இவர், அதே பகுதியில் உள்ள, மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, அவரது படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.