மழை காரணமாக தக்காளி காய்ப்பிலேயே கருகி வீண் ஆனதால் நஷ்டம்; விவசாயிகள் வேதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
04:11

மதுரை-பருவமழையின் தீவிரத்தால் அறுவடை செய்ய வேண்டிய தக்காளி பழங்கள் காய்ப்பிலேயே கருகி வீணானதால் சொல்லமுடியாத அளவு நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தக்காளி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.



வியாபாரிகள் கூடுதல் விலை வைத்து விற்றாலும் எங்களுக்கு லாபமில்லை என்கின்றனர் விவசாயிகள்.மதுரை மாவட்டத்தில் தக்காளி விவசாயம் சேடபட்டி, செல்லம்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளில் சாகுபடியாகிறது. குறைந்தளவு விவசாயிகளே தற்போது அறுவடை செய்து வரும் நிலையில் 15 நாட்களாக பெய்து வரும் தீவிர மழையால் காய்ப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருமங்கலம் மாவிலிபட்டி விவசாயி நடராஜன் கூறியதாவது:5 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளேன். மழை இல்லாத போது இரண்டு நாளைக்கு ஒருமுறை 150 பெட்டி தக்காளி கிடைக்கும். ஒரு பெட்டி என்பது 14 கிலோ. 15 நாட்களுக்கு முன் வரை ஒரு பெட்டி தக்காளி ரூ.200 வீதம் வியாபாரிகள் எடுத்து சென்றனர்.



குறைந்தது 150 பெட்டி நிறைய தக்காளி கிடைக்கும்போது லாபம் நின்றது. நாங்கள் சாகுபடி செய்வது நாட்டுரகம் என்பதால் மழைக்கு தாங்காது. மழை பெய்யும் போது தரையில் படர்ந்துள்ள தக்காளி காய்கள் கருப்படித்து அழுகி விட்டன.ஒரு ஏக்கருக்கு 800 பெட்டிகள் கிடைத்த நிலையில் தற்போது 100 பெட்டி அளவிற்கே தக்காளி கிடைக்கிறது.ஒரு நாள் விட்டு ஒருநாள் கணக்கு வைத்தாலும் 40 பெட்டி தக்காளி கிடைப்பதே கஷ்டம். பெட்டிக்கு ரூ.800 வீதம் வியாபாரிகள் தருகின்றனர். இதுவே ஆந்திர தக்காளிக்கு ரூ.1200 தருகின்றனர். ஆந்திரா தக்காளி 'கொடி தக்காளி' என்பதால் மழையால் பாதிப்பில்லை.நம்மூரில் தக்காளி பயிரிட்டவர்களுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.



இவ்வளவு மழை இருக்கும் என நினைக்காததால் பயிர் காப்பீடும் செய்யவில்லை. நன்றாக விளைச்சல் இருக்கும்போது ஆட்களின் பறிப்பு கூலியும் குறைவாக இருக்கும். தற்போது மழையால் செடியே வீணாகி போன நிலையில் ஒவ்வொரு பழமாக தேடி எடுக்க வேண்டியுள்ளது. பறிப்பு கூலியும்அதிகமாகிறது. கத்தரிக்காய் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் குறையை யாரிடம் போய் சொல்வதென்றே தெரியவில்லை.ரூ.200க்கு விற்றாலும்ஆச்சரியமில்லைசந்திரன், டி.கிருஷ்ணாபுரம்:ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துஉள்ளேன். மழைக்கு முன்னால் தினமும் 70 கிலோ தக்காளி அறுவடை செய்தேன். கிலோவுக்கு ரூ.40 கிடைத்தது.



15 கிலோ பெட்டிக்கு ரூ.550 வீதம் வியாபாரிகள் தந்தனர். மழையால் செடியே தரைப்பகுதியில் அழுகி விடுகிறது. நாட்டு தக்காளி ஒரு நாளுக்கு மேல் தாங்காது என்பதால் வியாபாரிகள் அதிக விலை தருவதில்லை. காய்கள் உற்பத்தி குறைந்ததால் இப்போது பெட்டிக்கு ரூ.600 தான் தருகின்றனர். விலையில் பெரிய மாற்றம் இல்லாததால் எங்களுக்கு தான் சேதாரம் அதிகம். கூடுதல் விலை வைத்து விற்றாலும் எங்களுக்கு லாபமில்லை. மழை பெய்தால் இப்போது இருப்பதும் அழுகிவிடும். சில்லறை மார்க்கெட்டில் கிலோ ரூ.200க்கு விற்றாலும் ஆச்சரியமில்லை.500ல் இருந்து குறைந்ததுபி.ரமேஷ் தக்காளி கமிஷன் ஏஜன்ட், ராஜாஜி சந்தை காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள காய்கறி சந்தைகளுக்கு ஆந்திர மாநிலம் பழமநேரி புங்கனுார் மதனபள்ளி கர்நாடக மாநிலத்தில் தாவண்கரே மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி ஓசூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி வரவழைக்கப்படுகிறது.



வரத்து குறைந்துள்ளதால் காஞ்சிபுரத்தில் சில்லறை விலையில் முதல் தரமான கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்கிறது. இரண்டாம் தர தக்காளி கிலோ 80 ரூபாய்க்கும் ஒன்றரை கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை குறைவாக இருந்தபோது ஒரு நாளைக்கு 500 பெட்டிகள் வரை விற்பனை ஆனது.தற்போது விலை உயர்வால் 300 பெட்டிகள் விற்பனை ஆகிறது.இடைத்தரகர் லாபம்நாகராஜ் விவசாயி கோவனுார்: பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனுாரில் அரை ஏக்கர் பரப்பில் தக்காளி விவசாயம் செய்துள்ளேன். கடும் மழையால் விளைச்சல் வெகுவாக குறைந்துவிட்டது. இடைத்தரகர்கள் எங்களிடம் கிலோ 50 ரூபாய்க்கு தக்காளியை பெறுகின்றனர். காய்கறி வியாபாரிகள் விற்பனை செய்யும்போது அதை கிலோ ஒன்றுக்கு 100லிருந்து 140 ரூபாய் வரை விற்கின்றனர். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். அனைத்து சிறு நகரங்களிலும் உழவர் சந்தைகளை ஏற்படுத்தி விவசாயிகளே தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பயனாளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இதனால் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் அடிப்பதை தடுக்க முடியும்.நேரடி கொள்முதல்நிலையம் வேண்டும்ம.பழனிசாமி தாந்தோணி உடுமலை: மழைக்காலத்தில் தக்காளி செடிகளை காப்பற்ற கொடி கட்டுதல் உட்பட பணிகளுக்காக ஏக்கருக்கு 1.5 லட்ச ரூபாய் வரை செலவிட்டுள்ளேன். இருப்பினும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாய்ச்சுதல் உட்பட பல்வேறு பணிகள் நாள் முழுவதும் இருப்பதால் நேரடியாக தக்காளியை விற்பனை செய்ய முடியாது. மேலும் நாள்தோறும் தோட்டத்தில் விளையும் 4000 கிலோவையும் நேரடியாக விற்பனை செய்வது சாத்தியமில்லை.எனவே சந்தைகளுக்கு சொந்த அல்லது வாடகை வாகனங்கள் வாயிலாக தக்காளியை கொண்டு வந்து கமிஷன் மண்டிகளில் விற்பனை செய்கிறோம். வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ 90-95 ரூபாய் வரை கிடைக்கிறது.



வட்டார வாரியாக நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு துவக்கினால் நுகர்வோர் விவசாயி என இருதரப்பினரும் பாதிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது.லாபம் எதிர்பார்க்க முடியாதுவி.வெங்கடேசன் தக்காளி மொத்த வியாபாரி செங்கல்பட்டு: ஆந்திரா மாநிலம்மதனபள்ளியில் இருந்து தக்காளியை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். முதல் தரம் இரண்டாம் தரம் என பிரித்து மொத்தமாக தக்காளி விற்கிறோம்.



முதல் தரம் 15 கிலோ அடங்கிய பெட்டி 1800 ரூபாய்; இரண்டாம் தரம் 1350 ரூபாய்க்கு விற்கின்றனர்.ஒரு பெட்டிக்கு 50 ரூபாய் கூடுதலாக சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம். மழைக்காலத்தில் தக்காளி வரத்து குறைவாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X