மதுரை -மேலுார் அருகே சுண்ணாம்பூர் அய்யப்பன் குமார். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: கீரனுாரில் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள நிலத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுகிறது. அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படும். மண் திருட்டை தடுக்கக்கோரி மதுரை கலெக்டர், மேலுார் தாசில்தாருக்கு புகார் அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு மதுரை கலெக்டர், கனிமவளத்துறை உதவி இயக்குனர், மேலுார் தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரம் ஒத்திவைத்தது.