மதுரை-மதுரை கோச்சடை அங்காள ஈஸ்வரி நகர் கோட்டையம்மாள் 60. வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, அதை மருமகன் பாலகிருஷ்ணன்அலைபேசியில் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தியுள்ளார். நவ.,2 பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு கோட்டையம்மாள் சென்றார். இருநாட்களுக்கு முன் அலைபேசியில் பாலகிருஷ்ணன் பார்த்தபோது கேமரா வேறு திசை நோக்கி திருப்பப்பட்டுஇருந்தது. அவரும், கோட்டையம்மாளும் மதுரை புறப்பட்டனர். வரும் வழியில் மீண்டும்அலைபேசியில் பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. வீடு வந்து பார்த்தபோது மூன்றரை பவுன் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டிருந்தன. எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.