புதுச்சேரி மாஜி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பரசுராமன் மாரடைப்பால் மரணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
04:33

புதுச்சேரி : புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும் மூத்த வழக்கறிஞருமான பரசுராமன் மாரடைப்பால் மரணமடைந்தார்.



புதுச்சேரி வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நீதிமன்ற வளாக வக்கீல் சங்க அறையில் நேற்று காலை 10.15 மணியளவில் நடந்தது. காலை 10.50 மணியளவில் மூத்த வழக்கறிஞரும், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பரசுராமன்,75, வாழ்த்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மேடையில் சரிந்து விழுந்தார்.சக வழக்கறிஞர்கள் கோர்ட் வளாக டாக்டரை அழைத்து பரிசோதித்தனர்.



இதய துடிப்பு இல்லாததை தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்ததில் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.மரணமடைந்த பரசுராமன், 1991 முதல் 1996 வரை உருளையன்பேட்டை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்தார். 1996 சட்டசபை தேர்தலில் உருளையன்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதன் பிறகு தேர்தலில் போட்டியிடாமல் கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி தலைவர், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர், மாநில இணை செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளை வகித்தார்., தற்போது கிழக்கு மாநில அ.தி.மு.க., அவைத் தலைவராக பதவி வகித்தார்.



இவருக்கு மனைவி அழகரசி,69, மகள் காந்திமதி,44, மகன் கம்பன்,42, உள்ளனர். மகள் காந்திமதி, கடலுார் பெரியார் அரசு கல்லுாரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மகன் கம்பன் அமெரிக்காவில் சுற்றுச்சூழல் விஞ்ஞானியாக பணிபுரிகிறார்.மகன் கம்பன் புதுச்சேரி வந்தபிறகு, இறுதிச் சடங்கு வரும் 28ம் தேதி நடத்தப்பட உள்ளதுபுதுச்சேரி காமராஜ் நகர் தமிழ்ச்செல்வி தெருவில் உள்ள பரசுராமன் இல்லத்தில் இருந்து அவரது உடல் கருவடிக்குப்பம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ளது. தற்போது அவரது உடல் பிம்ஸ் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப் பட்டுள்ளது.பரசுராமன் மறைவிற்கு கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X