தளவானூரில் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி தீவிரம் ...அரசுப் பள்ளி கட்டடத்தை பாதுகாக்க முயற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
04:52

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த தளவானுார் தென்பெண்ணை ஆற்றில் ஓடும் அதிக தண்ணீர் காரணமாக கரையோரப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு அடித்து செல்கின்றது.



அருகே உள்ள அரசு பள்ளி கட்டடத்திற்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க கரையை பலப்படுத்தும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.விழுப்புரம் அடுத்த தளவானுார், கடலுார் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில் 25.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டது.தளவானுார் மற்றும் எனதிரிமங்கலம் பகுதியில் தலா 3 ெஷட்டர்கள் அமைக்கப்பட்டது. கரை பகுதிக்கு மேல் 10 அடி, 4 அங்குலம் உயர கான்கிரீட் கரையும் கட்டப்பட்டது




.இந்த சூழலில் கடந்த 9ம் தேதி பெய்த கனமழையால், தளவானுார் அணைக்கட்டில் உள்ள மணல் தடுப்பு சுவர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டது.



இதையடுத்து, தளவானுாரில், விழுப்புரம் மார்க்கமுள்ள வலதுபுற அணைக்கட்டின் முதல் ெஷட்டர் உள்ள பகுதி சேதமாகியது.இந்த அணைக்கட்டில் தண்ணீரை தேக்க முடியாமல் கடலுார் கடலை நோக்கி நீர் சென்றது. இதனை தொடர்ந்து, கடந்த 13ம் தேதி, கரைப்பகுதி மேலும் 50 மீட்டருக்கு மேல் சரிந்து, விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.தடுப்பு கரை பகுதியில் இருந்த பனைமரங்கள், பதிக்கப்பட்ட கருங்கற்கள் மட்டுமின்றி, நிலத்தில் இருந்த கரும்புகளும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.



இதையடுத்து, கரைப்பகுதியை பலப்படுத்துவதற்காகவும், ஆற்று நீரோட்டம் நேரடியாக கடலை நோக்கி செல்வதற்காகவும் சேதமான அணையின் ெஷட்டர்களை வெடி வைத்து தகர்த்தனர்.இதையடுத்து, மீதமுள்ள அணைக்கட்டு பகுதிகளை தள்ளுவதற்காக நீரில் மிதக்கும் ஹிட்டாச்சி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இந்த இயந்திரமும், கன மழை பெய்து ஆற்றில் நீரோட்டம் அதிகரித்ததால் அடித்து செல்லப்பட்டு, சேதமடைந்தது.இந்த சூழலில், தளவனுாரில் மேற்கொண்டு தென்பெண்ணை ஆறு கரைப்பகுதி அரித்து சென்றுள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலை பள்ளி கட்டடத்தில் இருந்து 10 அடி இடைவெளியில் ஆற்று கரைப்பகுதி நெருங்கியுள்ளது.ஆற்று கரைப்பகுதி சேதமாகியதை யொட்டி, பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி கட்டடத்திற்கு நேற்று முதல் மாற்றப்பட்டு, வகுப்புகள் நடக்கிறது



.இதையடுத்து, பள்ளி கட்டடத்தையும், ஊர் பகுதியை காப்பதற்காக, பொதுப்பணித் துறை (நீர்வளம்) அதிகாரிகள், கரைப்பகுதியில் தடுப்புகள் அமைத்து பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.தைலம், சவுக்கு மரங்கள் மற்றும் இரும்பு பைப்புகள் மூலம் மூன்று அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணிகள் நடக்கிறது.கடந்த ஐந்து நாட்களாக நடைபெறும் இந்த பணிகளில் 70 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 500 மீட்டர் நீளம் கரையை பலப்படுத்தும் தடுப்பு பணிகளில் மூன்று ஹிட்டாச்சி மற்றும் ஒரு கிரேன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் நீரோட்டம் குறைந்துள்ளதால், பணிகள் தீவிரமாக நடக்கிறது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X