திண்டிவனம் : திண்டிவனத்தை சேர்ந்த ஜெயராஜ், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் ஒப்புதலுடன், கட்சியின் மாநில தலைவரான ஜி.கே.மணி, திண்டிவனத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராஜை, விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலாளராக நியமித்துள்ளார். இவருக்கு திண்டிவனம், வானுார் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.