ஆர்வம்அதை, அந்தந்த மாநில அரசுகள் பொதுமக்களுக்கு செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், இந்தாண்டு ஜன., 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி, நாடு முழுதும் துவங்கியது. தமிழகத்தை பொருத்தவரை, ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை.இதற்கிடையே, கொரோனா இரண்டாம் அலை, மார்ச் மாதம் முதல், ஜூன் மாதம் வரை உச்சத்தில் இருந்தது.
அப்போது, கொரோனா தடுப்பூசி போட்டவர்களில், பெரும்பாலானோர் தொற்று பாதிப்பில் இருந்து தப்பினர்.மேலும், தமிழக சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரசாரம் காரணமாக, சென்னையில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.அதனால், தமிழகத்திலேயே முதன் முறையாக, சென்னை மாநகராட்சியில், ஆக. 26ம் தேதி 'மெகா' தடுப்பூசி முகாம் நடந்தது. அன்று மட்டும், ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 865 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வழக்கமான நாட்களை விட விடுமுறை நாளில், வீட்டு அருகாமையில் நடத்தப்படும்,
முகாம்களில் தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் ஆர்வம் காட்டியதால், மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுதும் விரிவுபடுத்தப்பட்டது. விரைவில், 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில், தற்போது, வாரத்தில் இரண்டு நாட்கள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள, 55 லட்சத்து, 30 ஆயிரத்து, 900 பேர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. இவர்களில், மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டும், நேற்று முன்தினம் வரை, 38 லட்சத்து 71 ஆயிரத்து 238 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். அதேபோல், இரண்டாம் தவணை தடுப்பூசியை, 25 லட்சத்து 35 ஆயிரத்து 72 பேர் போட்டுள்ளனர். 18 சதவீதம்மேலும், சென்னையில் உள்ள, தனியார் மருத்துவமனைகளில், 6 லட்சத்து 74 ஆயிரத்து 588 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 4 லட்சத்து 656 ஆயிரத்து 714 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டனர்.
மொத்தமாக சென்னை மாநகராட்சியில், 45 லட்சத்து 45 ஆயிரத்து 826 பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளனர். 30 லட்சத்து, 786 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை போட்டு உள்ளனர்.அதன்படி, 82 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 54 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர். முதல் தவணை செலுத்தியோர் அனைவரும், நிச்சயம் இரண்டாம் தவணை செலுத்துவர் என்பதால், அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் வகையில், 12வது மெகா தடுப்பூசி முகாம் இன்று, 1,600 மையங்களில் நடைபெற உள்ளது. அதில், இதுவரை முதல் தவணை செலுத்தாத, 18 சதவீதம் பேரையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி, முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சியில், 10 லட்சத்து 99 ஆயிரத்து 195 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து, https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.மிக விரைவில், சென்னை மாநகராட்சியில், 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என, மாநகாரட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மெகா முகாமில்31 சதவீதம்சென்னையில்
இதுவரை, 11 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, செப்., 26ம் தேதி நடந்த, 4வது மெகா தடுப்பூசி முகாமில், ஒரே நாளில், 2 லட்சத்து 25 ஆயிரத்து 627 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.அதன்படி, தடுப்பூசி முகாம்களில் மட்டும், 17 லட்சத்து 8 ஆயிரத்து 10 பேர் என, 31 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.இரண்டாம் தவணை 54 சதவீதம்சென்னையில், கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தியோர் எண்ணிக்கை 82 சதவீதமாக உள்ள நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை, 54 சதவீதமாக உள்ளது.அதவாது, 45 லட்சத்து, 45 ஆயிரத்து 826 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நிலையில், 30 லட்சத்து 786 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
- நமது நிருபர் -