அவதி சொந்த கட்டடமின்றி கல்லூரி மாணவர்கள்...கண்டுகொள்வார்களா மக்கள் பிரதிநிதிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
06:01

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கென சொந்த கட்டடம் இல்லாததால், அங்கு பயிலும் மாணவர்கள் பஸ் வசதியின்றி பல கி.மீ., தொலைவிற்கு சென்று கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த 2011--ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி துவக்கப்பட்டது. அப்போதிலிருந்து பள்ளி வளாகம் உள்ளிட்ட பல்வேறு தற்காலிக இடங்களில் கல்லுாரி நடத்தப்பட்டு, மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வந்தனர். கடந்த 2016ம் ஆண்டு கல்லுாரிக்கென நிரந்தர கட்டடம் கட்ட சிறுவங்கூர் கிராம எல்லையில் 11 ஏக்கர் பரப்பளவுடன் கூடிய இடத்தில் 7.25 கோடி ரூபாய் மதிப்பில் 15 வகுப்பறைகள், 2 ஆய்வகங்களுடன் கல்லுாரி கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.



இக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல் உள்ளிட்ட 7 பாடப்பிரிவுகளிலும், முதுநிலை வகுப்புகளிலும் அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். கல்லுாரி முதல்வர் உட்பட 59 விரிவுரையாளர்கள், 8 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அரசு கல்லுாரி கட்டடம் தனிமைப்படுத்தும் வார்டாக மாற்றப்பட்டது.



இரண்டாம் அலையின் போது, கல்லுாரி வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட படுக்கைகள், சாய்தளம், அனைத்து அறைகளுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லும் பைப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பல லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்டது.இந்நிலையில், இந்த கலைக்கல்லுாரி கட்டடம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றப்பட்டு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு தற்போது அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை கட்டுமானம் முடிந்து திறப்பு விழா நடைபெற உள்ளது.



அதற்கு மாற்றாக, அரசு கல்லுாரிக்கென சடையம்பட்டு கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தையும், 11 கோடி ரூபாயையும் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் ஒதுக்கியது. ஆனால், அந்த இடத்தில் இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை.இதனால் நிரந்தர கட்டடமின்றி, அரசு கல்லுாரி மாணவர்கள் பந்தாடப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன் குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பின், கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஏமப்பேர் கரியப்பா நகர் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 வகுப்பறைக் கட்டடங்களில் கல்லுாரி இயங்கியது.



ஆனால் அங்கு பள்ளிகள் துவங்கிய காரணத்தால் கள்ளக்குறிச்சியிலிருந்து பல கி.மீ., தொலைவில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி வளாகத்தில் தற்போது இந்த கல்லுாரி இயங்கி வருகிறது.இங்கு, மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைகேற்ப போதிய வகுப்பறை கட்டடங்கள் ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக, ஆய்வகங்கள், நுாலகம், செமினார் ஹால், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லை.கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவங்கூரில் கல்லுாரி இயங்கிய நிலையில், திடீரென மருத்துவகல்லுாரி நிர்வாகத்திற்கு தாரை வார்க்கப்பட்டது.



அதற்கு பதிலாக வேறொரு இடமும், நிதியும் ஒதுக்கப்பட்டாலும், இதுவரை அங்கு கட்டுமானப் பணிகள் துவக்கப்படவில்லை. அரசு கல்லுாரிக்கென நிரந்தர கட்டடம் கட்டுவது குறித்து, மாவட்டம் நிர்வாகம் சிறிதும் அக்கறை காட்டாததால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன் கனியாமூர் தனியார் பள்ளியில் அரசு கல்லுாரி திறக்கப்பட்டுள்ள நிலையில், போதிய பஸ் வசதி இல்லாததால் இங்கு சென்றுவர முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பல ஆண்டுகளாக போதிய இடவசதியின்றி தவித்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் அவலத்தை போக்கிட மாவட்ட நிர்வாகம், எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X