கட்டுமான நிறுவனம் முறைகேடு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
06:11

சென்னை : வீடு வாங்கியவரின் அனுமதியின்றி, புது வீட்டு முன்பதிவை ரத்து செய்த கட்டுமான நிறுவனம், 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டுடன் வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



3சென்னை கீழ்ப்பாக்கம், பிளவர்ஸ் சாலையை சேர்ந்தவர் மங்களா, 45. தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின், அடுக்குமாடி குடியிருப்பில், 1.17 கோடியில் இரண்டு வீடுகள் வாங்குவதற்கு, 1 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி,முன்பதிவு செய்தார். இதன்பின் மூன்று காசோலைகள் வாயிலாக, 23 லட்சம் ரூபாய் செலுத்தினார். இந்நிலையில், ஆறு மாதங்கள் கழித்து, அவரிடம் தெரிவிக்காமல் வீட்டு முன்பதிவை கட்டுமான நிறுவனம் ரத்து செய்துவிட்டது. 23 லட்சம் ரூபாய்கான காசோலையையும் திரும்ப வழங்கியது. வீட்டின் விலை உயர்வால்அவரிடம் தெரிவிக்காமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.



இதனால், தனக்கு, 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் Rநீதிமன்றத்தில் மங்களா வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணையில், 'ஒப்பந்தப்படி உரிய காலத்தில் மீதிப்பணம் செலுத்தவில்லை. வீட்டு விலை உயர்வால் ரத்து செய்யப்படவில்லை. காலக்கெடுவுக்குள் பணம் செலுத்தாததால் ரத்து செய்யப்பட்டது' என, கட்டுமான நிறுவனம் தெரிவித்தது.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தீனதயாளன், நீதித்துறை உறுப்பினர் வினோத்குமார் பிறப்பித்த உத்தரவு:கட்டுமான நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியுள்ளது. முன் பணம் 1 லட்சம் ரூபாய், 12 சதவீத வட்டியுடன், மனுதாரருக்கு திரும்ப வழங்க வேண்டும். இத்துடன், 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டுடன், வழக்கு செலவாக, 20 ஆயிரம் ரூபாயும் கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X