என்.எல்.சி.,தொழிலாளி வீட்டில் சடலமாக மீட்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
06:33

நெய்வேலி : வீட்டில் இறந்து கிடந்த என்.எல்.சி., தொழிலாளியின் பிரேதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.நெய்வேலி டவுன்ஷிப் 29 வட்டத்தைச் சேர்ந்தவர் மாயவன்.47; இவர் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் லிக்னைட் பெஞ்சில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.



இவரது மனைவி மீனாட்சி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் நெய்வேலியில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வருகின்றார். மற்றோரு மகன் சென்னையில் வசித்து வருகின்றார்.குடிப்பழக்கம் உள்ள மாயவன் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.



நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள் தெர்மல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தெர்மல் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் அவரது வீட்டற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது . இதனால் சந்தேகமடைந்த போலீசார் உள்ளே சென்றபோது கழிவறையிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அங்கு சென்ற போலீசார் , கழிவறையில் உள்பக்கம் தாளிடப்பட்டிருந்ததால் கதவை உடைத்துப் பார்த்தனர்.



அங்கு மாயவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.போலீசார் மாயவன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் தெர்மல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.என்.எல்.சி., தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X