மரம் வெட்டும் தொழிலாளி சாவு இழப்பீடு கேட்டு உறவினர்கள் பிரச்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
06:34

கடலுார், : கல்வி அலுவலகத்தில் கீழே விழுந்து இறந்த மரம் வெட்டும் தொழிலாளியின் உறவினர்கள், இழப்பீடு கேட்டு பிரேத பரிசோதனை செய்ய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கடலுார் புதுக்குப்பம் எஸ்.ஆர்.காலனியை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் மூர்த்தி, 38; மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். நேற்று காலை கடலுார் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் மரம் வெட்டும் பணியில் மூர்த்தி ஈடுபட்டார்.அப்போது மரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.

.


கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய விடாமல் உறவினர்கள் தடுத்தனர். இறந்த மூர்த்தியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வரவில்லை. இதனால் பிரேத பரிசோதனை செய்ய வந்த டாக்டர்கள் திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X