ரவுடி கொலையில் இருவர் கைது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு முருகேசனார் தெருவைச் சேர்ந்த மோகன் மகன் விக்னேஷ் விக்கி, 28; ரவுடி.தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு மனைவி அனிதா, 24, மகன், மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, ஒழலுாரில் உள்ள மாமியார் வீட்டிற்கு, சாலையில் நடந்து சென்றார். பின்னால் வந்த மர்ம கும்பல், விக்னேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்து, தப்பிச் சென்றது.இது குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, செங்கல்பட்டு ஜாபர் தெருவைச் சேர்ந்த அன்வர், 29, சாஸ்திரி நகர் பன்னீர்செல்வம், 32, ஆகியோரை நேற்று கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து தீர விசாரித்து வருகின்றனர்.