செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக, 14.72 கோடி ரூபாயை, கலெக்டர் ஒதுக்கினார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம்,
வழக்கம்.நடப்பு 2021- -- 22ம் ஆண்டுக்கான மாநில நிதிக்குழு மானியம், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கான மானிய தொகை, 14.72 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.இதில் மாவட்ட ஊராட்சிக்கு, 1.22 கோடி ரூபாய்; எட்டு ஒன்றியங்களுக்கு, 5.௦௧ கோடி ரூபாய்; 359 ஊராட்சிகளுக்கு 8.48 கோடி ரூபாய் என, மொத்தம் 14.72 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, பணிகளை மேற்கொள்ள கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.உள்ளாட்சி
தேர்தலுக்கு பின், மாநில நிதிக்குழு மானிய நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஊராட்சியில் குடிநீர், சாலை வசதி, சிறுபாலங்கள், மழை நீர் கால்வாய் அமைத்தல், தெருவிளக்கு பராமரிப்பு, புதிய சாலைகள் போடுவது, குடிநீர் குழாய் உடைந்தால் மாற்றுவது, ஊராட்சி அலுவலகம், நுாலகம் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு ஆகிய பணிகளை செயல்படுத்தலாம்.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர்