கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் 18.60 லட்சம்! ... 3 மாவட்டத்திலும் விழிப்புணர்வு அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
07:06

இன்று 1,280 சிறப்பு முகாம்கள் அமைப்பு- நமது நிருபர் -மாநில சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு நடவடிக்கைகளால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களையும் சேர்த்து, 18.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில்,



இரு மாவட்டங்களில் 1,280 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.கொரோனா அலையின் இரண்டாம் அலை முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த அலை உருவாவதை தடுக்கவும், அப்படியே வந்தாலும் அதன் வீரியத்தை குறைக்கவும், தடுப்பூசி ஒன்றே வழி என, டாக்டர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசு என அனைத்து தரப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இருவகை தடுப்பூசிகள், மத்திய அரசின் சார்பில் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.இதற்கிடையே, கொரோனா இரண்டாம் அலை, மார்ச் மாதம் முதல், ஜூன் மாதம் வரை உச்சத்தில் இருந்தது. அப்போது, கொரோனா தடுப்பூசி போட்டவர்களில், பெரும்பாலானோர் தொற்று பாதிப்பில் இருந்து தப்பினர்



.இதையடுத்து ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டாத மக்கள், அரசு விழிப்புணர்வு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகளால், தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஐந்து தாலுகாக்களில், 7.26 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மாவட்ட அளவில், முதல் தவணை தடுப்பூசி, 7.26 லட்சம் பேருக்கு முழுதுமாக செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி மொத்த இலக்கில், 45 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது என, சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.மாவட்டத்திலேயே அதிக தடுப்பூசி செலுத்திய மருத்துவமனைகளில், குன்றத்துார் மேம்படுத்தப்பட்ட அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் முதல் இடத்தில் உள்ளது.



அங்கு மட்டும், 81 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டம் முழுதும், 370 மையங்களில், 11வது 'மெகா தடுப்பூசி' முகாம் இன்று நடைபெற உள்ளது.இன்றைய தேதியில், முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு, இரண்டாவது தடுப்பூசிக்கான தவணை வந்தபின்னும், 1.32 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம் சிறிய மாவட்டமாக உள்ளதால், முதல் தவணை தடுப்பூசி இலக்கை விரைந்து எட்டியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தின் எட்டு நகராட்சிகளில் வீடு வீடாக சென்று, தடுப்பூசி செலுத்தும் பணியில், சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்



.கடந்த ஜன., 16ல் இருந்து நேற்று முன்தினம் வரை, மூன்று மாவட்டத்தை சேர்ந்து 18.60 லட்சம் பேர், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதேபோல், இரண்டாம் தவணை தடுப்பூசி 7.14 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர்மாவட்டத்தில் 910 இடங்களில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடத்தப்படுகிறது. 2,320 சுகாதார பணியாளர்கள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் என, 1,055 பேர் பங்கேற்கின்றனர்.



கொரோனா தடுப்பூசி எடுத்தால் தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.போனில் பேசி அழைப்புஇன்றைய தேதியில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நபர்களுக்கு, குறுஞ்செய்தி, போனில் பேசி நினைவூட்டப்பட்டு முகாமிற்கு, அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் வகையில், சுகாதாரத் துறையினர் வீடு வீடாக சென்று, பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.



கே.பழனிதுணை இயக்குனர், சுகாதாரத் துறை, காஞ்சிபுரம்நான்காவது இடத்தில் திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை துரித வேகத்தில் எடுத்து வருகிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதுவரை மாவட்டத்தில், 11 முறை மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டுள்ளது.அந்த வகையில் மாவட்டத்தில்



இதுவரை மொத்தம் 9,135 கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம், 7.78 லட்சம் பேருக்கு முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 37.6 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இந்த மகத்தான பணிகளில், திருவள்ளுர் மாவட்டம் நான்காவது இடத்தில் உள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X