ஆர்.கே.பேட்டை : கிருபானந்த வாரியார் மடத்தில், ஐம்பொன் சிலை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தின் வடக்கு பகுதியில் சாந்தமலை அடிவாரத்தில் கிருபானந்த வாரியார் மடம் உள்ளது.
மடத்தில் இருந்த, வாரியார் ஐம்பொன் சிலை நேற்று முன்தினம் இரவு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை கோவிலுக்கு வந்தவர்கள், வாரியார் சிலை காணாததை கண்டனர். மடம் நிர்வாகிகள், ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.