கும்மிடிப்பூண்டி : கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், மாணவி ஒருவரும், மாணவர் ஒருவரும் ஓடும் புறநகர் மின்சார ரயிலின் கம்பியை பிடித்தபடி நடைமேடையில் வேகமாக ஓடுகின்றனர்.
இதுபோன்று ஆபத்தான சாகசங்களும், அட்டகாசங்கள் செய்வதாக, ரயில் பயணியர் தெரிவிக்கின்றனர்.கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இந்த அபாயகரமான சாகசம் அரங்கேறியதால், அங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், விசாரித்த போது, அந்த பள்ளியின் மாணவர்கள் இல்லை என தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட மாணவ - மாணவியரை கண்டறிந்து, இதுபோன்று ஆபத்தான ரயில் சாகசங்களை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மாணவர்கள் தங்கள் பொறுப்பை உணரும் வகையில், உளவியல் ரீதியான வகுப்புகளும், பயிற்சிகளும் அரசு அளிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.