திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, நேற்று, இஸ்கான் அமைப்பு சார்பில், வைணவ நுால்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
தமிழக சட்டசபையில், ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பின்படி, கோவில்களுக்கு சொந்தமான சமய நுாலகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சமய நுாலகத்தை மேம்படுத்துவதற்காக, இஸ்கான் அமைப்பினரும், ரெங்கராஜ் பட்டர் குடும்பத்தினரும் வைணவ நுால்களை, நேற்று, கோவில் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் நன்கொடையாக வழங்கினர்.ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், பிரம்ம சம்ஹிதை, நாரத பக்தி சூத்திரம் உட்பட 25 நுால்கள், கோவில் நுாலகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.