ஈரோடு: திருப்பூர் வந்த முதல்வர் ஸ்டாலினிடம், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டமைப்பின் ஈசன், மாநில ஒருங்கிணைப்பாளர் கவின் ஆகியோர் மனு வழங்கினர். பின், அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டம், பாரத் பெட்ரோலிய குழாய் பதிக்கும் ஐ.டி.பி.எல்., திட்டம், கெயில் போன்ற திட்டங்கள் நேரடியாக விளை நிலங்களுக்கு மத்தியில் கொண்டு செல்லும்படி வடிவமைத்துள்ளனர். இதனால், விளை நிலங்களை பயன்படுத்த முடியாமலும், புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த முடியாமலும், விற்கவும், வீடு கட்டவும் முடியாமல் சிரமப்படுகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.