சென்னிமலை: சென்னிமலை அருகே, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் தேங்காய் ஏலம் நடந்தது. 10 ஆயிரத்து, 894 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 31 ரூபாய், அதிகபட்சமாக, 34.10 ரூபாய், சராசரியாக, 32.50 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 4,286 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ஒரு லட்சத்து, 38 ஆயிரத்து, 839 ரூபாய்க்கு விற்பனையானது.