புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான காவிலிபாளையம், வரப்பாளையம், கொண்டையம்பாளையம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் மாசி வரை பனங்கிழங்கு சீசன் கால கட்டமாகும். இந்தாண்டு விவசாயிகள் பலர், பனை விதைகளை நடவு செய்துள்ளனர். தற்போது பனங்கிழங்கு அறுவடை தொடங்கியுள்ளது. இவற்றை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரை விலைக்கும் வாங்கி வெளியூர்களுக்கு அனுப்புகின்றனர். ஒரு பனங்கிழங்கு, ஐந்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் கூறுகையில், 'பனங்கிழங்கு ஒரு மூட்டை, 3,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவற்றை பச்சையாகவும், வேக வைத்தும், 10 கிழங்குகள் உள்ள கட்டுகளாக கட்டி, 50 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்கிறோம். பனங்கிழங்கு உடல் நலத்திற்கு நல்லது என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்,' என்றார்.