சபாநாயகர் பேச்சுக்கு கொ.ம.தே.க.,வரவேற்பு | ஈரோடு செய்திகள் | Dinamalar
சபாநாயகர் பேச்சுக்கு கொ.ம.தே.க.,வரவேற்பு
Added : நவ 25, 2021 | |
Advertisement
 

ஈரோடு: சிம்லாவில் நடந்த சபாநாயகர்களுக்கான மாநாட்டில், 'சட்டசபை தீர்மானங்கள் மீது, கவர்னர் முடிவெடுக்கும் காலத்தை நிர்ணியக்க வேண்டும்' என, சபாநாயகர் அப்பாவு பேசியதற்கு, கொ.ம.தே.க., வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஈரோட்டில், கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: சிம்லாவில், துணை ஜனாதிபதி தலைமையில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில், தமிழக சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார். அங்கு சபாநாயகர் அப்பாவு, சில மாநிலங்களில் ஆட்சியில் இருப்பவர்களின் சர்வாதிகார போக்கும், விவாதங்கள் நடக்காமல் நிறைவேற்றப்படும் சட்ட முன் வடிவங்களையும், குறைவான நேரத்தில் சபாநாயகர் கடும் சிரமத்துடன் அணுகுவதை விளக்கி உள்ளார். சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், கவர்னருக்கு அனுப்பப்பட்டு மாதக்கணக்கில், ஆண்டு கணக்கில் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இவற்றுக்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். அது மிகவும் அவசியமானது. அவரது பேச்சு இன்று தேசிய அளவில் விவாத பொருளாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X