ஈரோடு: ஈரோடு முத்தம்பாளையம், நசியனூர் சாலை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர். பத்திரம் பெறாதவர்களுக்கு இதுவரை, இரண்டு முகாம் நடத்தப்பட்டு பத்திரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு சம்பத் நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வரும், 26, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் மீண்டும் முகாம் நடக்கிறது. இதில் முழு தொகை செலுத்தி பத்திரம் பெறாதவர்கள் பங்கேற்று, ஆவணங்களை தாக்கல் செய்து கிரய பத்திரங்களை பெற வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளனர்.