ஈரோடு: தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம், சென்னிமலை, தாளவாடி ஆகிய ஐந்து வட்டாரங்களில், 77 பஞ்.,களில் செயல்படுகிறது. இப்பஞ்.,களில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டு வரும் சிறு, குறு, நுண் நிறுவன செயல்பாடுகளை தனி நபர் மற்றும் கூட்டு நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள, பஞ்.,க்கு ஒருவர் வீதம் தொழில் சார் சமூக வல்லுனர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. மகளிர் குழு சார்ந்தவராக இருக்க வேண்டும். 25 முதல், 45 வயதுக்கு உட்பட்ட அதே பஞ்., பகுதியை சேர்ந்த, இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற, ஆன்ட்ராய்டு போன் வைத்துள்ள, வாழ்வாதார வளர்ச்சி, தொழில் மேம்பாட்டு செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள், அப்பஞ்.,ல் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம், பஞ்., அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெறலாம். தவிர, பவானி - 94434 05252, பவானிசாகர் - 94883 87426, சத்தியமங்கலம் - 70108 72247, சென்னிமலை - 96986 70228 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் அறியலாம். இதற்கான விண்ணப்பம் வரும், 30க்குள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.