ஆத்தூர்: ஆரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று பாம்பு புகுந்தது. ஆசிரியர்கள் தகவல்படி, ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் வீரர்கள், வகுப்பறையில் புகுந்த, 6 அடி நீள சாரைப்பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், பாம்பை கல்வராயன் மலைப்பகுதியில் விட்டனர்.