சேலம்: நகர்புற உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாநகரில் வெற்றி பெறுவது குறித்து, பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சூரமங்கலத்தில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., அருள் தலைமை வகித்தார். அதில், மாநகரின் அனைத்து வார்டுகளிலும் வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி உள்பட, மாநகரின், 60 வார்டு செயலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.