சேலம்: இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில், சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் அரவிந்த் தலைமை வகித்தார். அதில், கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் குற்றங்களுக்கு உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.