சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 15 பேர், மேட்டூர், 4, வீரபாண்டி, தலைவாசல் தலா, 3, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம் தலா, 2, இடைப்பாடி, மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி தலா ஒருவர் என, 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் எஸ்.ஐ.,க்கு, நேற்று முன்தினம் கொரோனா உறுதியானதால், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார், கொரோனா பரிசோதனை செய்து விட்டு தனிமையில் உள்ளனர்.