ஆத்தூர்: ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நேர்முகத்தேர்வு முகாம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., சரண்யா தலைமை வகித்தார். அதில், முதுகு, தண்டுவடம், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பேட்டரி சக்கர நாற்காலி, மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு மனு அளித்தவர்களிடம் நேர்முகத்தேர்வு நடந்தது. 100க்கும் மேற்பட்டோரிடம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்தனர்.