வீரபாண்டி: கால்நடை பராமரிப்புதுறை சார்பில் பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி போன்ற மாட்டினங்களுக்கு, கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தில், கடந்த, 1 முதல், 24 வரை இலவச தடுப்பூசி முகாம் நடந்தது. அதில், வீரபாண்டி வட்டாரம், கால்நடை மருந்தகங்களுக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் முகாம் நடந்தது. இதுவரை, 23 ஆயிரத்து, 800 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாத மாடுகளை, வரும், 30க்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு அழைத்து வந்து ஊசி போட்டுக் கொள்ள, கால்நடை மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.