ஓமலூர்: எம்.செட்டிப்பட்டி, வெற்றிலைக்காரன் தெருவை சேர்ந்த பழனிசாமி மனைவி வசந்தா, 58. இவர் தோட்டத்தில் இருந்த கருவேல மரங்களை, கடந்த, அக்., 29ல், அருகே வசிக்கும் கணேசன், 67, அவரது மகன் முருகன், 37, முருகனின் மனைவி சுதா, 30 ஆகியோர் வெட்டியுள்ளனர். இதுகுறித்து, அன்றே சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் வசந்தா புகார் தெரிவித்தார். அதனால், அந்த மூன்று பேர் மீது தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.