சேலம்: பெத்தநாயக்கன்பாளையம், தளவாபட்டி, ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன், 19. இவர், 17 வயது சிறுமியை காதலித்தார். அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, கடந்த, 15ல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே சிறுமியின் தந்தை, வாழப்பாடி போலீசில் மகளை காணவில்லை என புகார் அளித்திருந்தார். நேற்று, காதல் ஜோடியை, போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்தனர். திருமண வயது ஆகாததால் பிரித்து விடுவர் என நினைத்த ஜோடி, அரளி விதையை சாப்பிட்டு ஸ்டேஷனுக்கு சென்றனர். வாழப்பாடி மகளிர் போலீசார் விசாரித்த நிலையில், அரளி விதை சாப்பிட்டதை தெரிவித்தனர். இதனால், இருவரையும் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். பின், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.