கம்பைநல்லூர்: தர்மபுரி அருகே இருமத்தூரில், நேற்று காலை கம்பைநல்லூர் எஸ்.ஐ., கோவிந்தராசன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு எஸ்.எஸ்.எம்., ஓட்டல் கடை பின்புறம் மூட்டையுடன் நின்றிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் இருமத்தூரை சேர்ந்த சுரேஷ், 42, என தெரிந்தது, அவர், போச்சம்பள்ளி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிவதும், மதுபானங்களை மொத்தமாக வாங்கி, கூடுதல் விலைக்கு சில்லரையில் விற்க, பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.