உழவர்சந்தைகளில் தக்காளி விலையை குறைத்த அதிகாரிகள்; விற்பனையை நிறுத்திய விவசாயிகள், வியாபாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
16:05

தமிழக உழவர்சந்தைகளில் தக்காளி விலையை குறைத்து நிர்ணயம் செய்ததால், விவசாயிகள், வியாபாரிகள் பலர் தக்காளி விற்பனையை நிறுத்தினர்.


தமிழகத்தில் பெய்து வரும் மழையால், தக்காளி விளைச்சல் வீழ்ச்சியடைந்தது. ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்து தக்காளி வரத்திலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த, ஒரு வாரமாக தக்காளி விலை உயர்ந்தது. வெளி மார்க்கெட்டில் கிலோ, 130 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் உள்ள, 179 உழவர்சந்தைகளில், முதல் தர தக்காளி பழம், கிலோ, 100 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 90 ரூபாய் என வியாபாரிகள் நிர்ணயித்த விலையில், விவசாயிகள் விற்பனை செய்தனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் இரவு, தோட்டக்கலைத்துறை வணிக பிரிவு அதிகாரிகள், வாய்மொழி உத்தரவுகளை, உழவர்சந்தை அதிகாரிகளுக்கு பிறப்பித்தனர். நேற்று தக்காளி முதல் தரம் கிலோ, 90 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் கிலோ, 76 - 86 ரூபாய் என அதிகாரிகள் நிர்ணயித்தனர். இதற்கு விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள்,'விருப்பம் இருந்தால், உழவர்சந்தையில் விற்பனை செய்யுங்கள்; இல்லை என்றால் வெளியே செல்லுங்கள்' என கூறினர். விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் கொண்டு வந்த தக்காளி பழங்களை அப்படியே மொத்தமாக கிலோ, 120 ரூபாய்க்கு ஓட்டல்கள், மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்தனர். நேற்று காலை, 6:00 மணிக்கு, உழவர்சந்தைகளில் தக்காளி விற்பனைக்கு இல்லை. உழவர்சந்தைகளில் விலை குறைவாக கிடைக்கும் என்ற எண்ணத்தில் தக்காளி வாங்க வந்த பொதுக்கள் பழம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


- நமது சிறப்பு நிருபர் -


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X