தடுப்பூசி செலுத்திக் கொள்ள வணிகர்களுக்கு அறிவுரை | நாமக்கல் செய்திகள் | Dinamalar
தடுப்பூசி செலுத்திக் கொள்ள வணிகர்களுக்கு அறிவுரை
Added : நவ 25, 2021 | |
Advertisement
 

நாமக்கல்: 'பொதுமக்களுடன், அதிகளவு தொடர்பில் இருக்கும் வணிகர்கள், தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்று பாதித்த நபர் அடையும் வலியை விட அவரின் குடும்ப உறுப்பினர்கள் படும் மனக்கஷ்டம் மிகவும் கொடுமையானது. தடுப்பூசியால் மட்டுமே, நம் உயிரை பாதுகாக்க முடியும். தடுப்பூசி செலுத்திக் கொண்டால், நமக்கு கொரோனா தொற்று வராது என்ற எண்ணமும் தவறு. அவ்வாறு தொற்று ஏற்பட்டாலும், உடலில் மிகப்பெரிய பாதிப்பு உண்டாகாமல் உயிர் சேதம் நிகழாமல் காத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம். இரு தவணைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது நமக்கு கூடுதல் பாதுகாப்புக்கு வழி வகுக்கும். குறிப்பாக, பொதுமக்களுடன், அதிகளவு தொடர்பில் இருக்கும் வணிகர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள். சுயமாக வைத்தியம் செய்துகொள்வதை தவிர்த்திடுங்கள். அரசு மற்றும் மருத்துவர்களின் அறிவுரைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X