நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், இன்று (நவ., 25), மாலை, 5:00 மணிக்கு, நளா ஓட்டலில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமை வகிக்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி முன்னிலை வகிக்கின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி (நகராட்சி, பேரூராட்சி) தேர்தல், விவசாய சங்கங்கள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெற்ற தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாளை (நவ., 27) விமரிசையாக கொண்டாடுவது, கட்சியின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, மாவட்ட பொறுப்பாளரும், எம்.பி., யுமான ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.