நாமக்கல்: குமாரபாளையம் அருகே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் மனு கொடுத்தனர். மனு விபரம்: காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள், குமாரபாளையம் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் உள்ளன. அவற்றில் இரண்டு ஏக்கர், 10 சென்ட், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். மேற்படி நபர் அறநிலையத்துறை சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்து பல அடுக்கு மாடி கட்டடம் மற்றும் கடைகள், வணிக வளாகம் அமைத்து வாடகை வசூலித்து வருகிறார். எனவே, தனி நபரிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.