நாமக்கல்: நாமக்கல்லில் ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையிலான யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சென்னை அண்ணா நிர்வாக மேலாண்மை பயிற்சி மையம் சார்பில், அரசுத் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு தகவல் தொடர்பு, கால மேலாண்மை, யோகா, மன அழுத்தத்தை போக்குதல், இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல் போன்ற பயிற்சிகள் சுழற்சி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாமக்கல்லைச் சேர்ந்த, 42 ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த பயிற்சி முகாமை, அண்ணா நிர்வாக பயிற்சி மைய துணை கலெக்டர் குமார் துவக்கி வைத்தார். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா, நோய் எதிர்ப்பாற்றல், மன அழுத்தம் நீக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டது.